PFI-ன் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்துகிறோம்.. ஆனால்.?- PFI முகமது ஷேக் அன்சாரி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பி.எப்.ஐ இஸ்லாமிய அமைப்பின் மீது பயங்கரவாத செயலுக்கு பயிற்சி அளித்தல், ஆட்கள் சேர்த்தல் மற்றும் இது போன்ற பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இருந்தன. இது குறித்த கடந்த 22 ஆம் தேதி 15 மாதங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி 106 பேரை கைது செய்தது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாட்டில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. குறிப்பாக இது தமிழகம் மற்றும் கேரளாவில் நடந்தது. நேற்று இரண்டாவது முறையாக கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், டெல்லி, அசாம், மராட்டியம், குஜராத் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் சோதனை நடைபெற்றது.

இதில் 250க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு சோதனைகளிலும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய டிஜிட்டல் கருவிகள் ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இத்தகைய நிலையில், இன்று பி.எப். ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் மீது ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. 

இதை எதிர்த்து பி.எப்.ஐ அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். இத்தகைய சூழலில், மத்திய அரசின் தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்ப்போம் என்றும், பி.எப்.ஐ என்ற பெயரில் செயல்பட்டு வந்த அனைத்து செயல்பாடுகளும் நிறுத்திக் கொள்ளப்படுவதாகவும் பாப்புலர் ப்ரெண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த முகமது ஷேக் அன்சாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PFI Mohammed sheik ansari saud that all activities Of PFI stopped


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->