2036 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த திட்டம்; அமித்ஷா உறுதி..!
Plan to host the 2036 Olympics in India
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வந்தது. இன்று மாலையுடன் இந்த போட்டி நிறைவடைந்துள்ளது. போட்டியின் நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
இதன் போது 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராக உள்ளது என அவர் உறுதி அளித்துள்ளார். அத்துடன், இது தொடர்பாக அமித் ஷா கூறியுள்ளதாவது;

விளையாட்டில் இந்தியாவுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதை இன்று என்னால் சொல்ல முடியும். 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக விண்ணப்பம் செய்துள்ளோம். ஒலிம்பிக் போட்டியை நடத்த நாம் தயாராக உள்ளோம் என்று உறுதியளித்துள்ளார். அத்துடன், ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடைபெறும் போது, நமது வீரர்கள் பதக்கங்களை வென்று, இந்திய கொடியை உயரத்தில் பறக்கச் செய்வார்கள்" என்ரம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவி ஏற்கும்போது, நம்முடைய விளையாட்டு பட்ஜெட் 800 கோடியாக இருந்தது. தற்போது அது 3,800 கோடியாக உயர உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இது மோடி அரசு விளையாட்டு துறை வளர்ச்சிக்காக உறுதிப்பூண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

2014-ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் 15 பதக்கங்கள் வென்றனர். தற்போது அது 26 ஆக உயர்ந்துள்ளது, 2014 ஆசியப் போட்டியில் 57 பதக்கங்கள் வென்ற நிலையில், 2023-ல் 107 ஆக உயர்ந்துள்ளது என்று அமித் ஷா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பித்திருந்தாலும், அது ஆரம்கால கட்டத்திலேயே இருக்கிறது. அடுத்த வருடம் வரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இது தொடர்பாக முடிவு எடுக்குமா அல்லது எடுக்காதா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.
English Summary
Plan to host the 2036 Olympics in India