ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டம்..இஸ்ரோ அடுத்த சாதனைக்கு தயார்!  - Seithipunal
Seithipunal


ககன்யான் முதல் பயணத்தில் பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இதில் 2 ஆள் இல்லாத ராக்கெட் மூலம் சோதனை செய்த பின்னர் 3-வது ராக்கெட் ஆட்களை ஏற்றி செல்ல இருக்கிறது. மேலும் இது 3 இந்திய விண்வெளி வீரர்களை விசேஷமாக வடிவமைக்கப்பட்ட விண்கலத்தில் தாழ்வான பூமி சுற்றுப்பாதையில் அனுப்பி பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதை நோக்கமாக கொண்ட திட்டமாகும்.

இந்தநிலையில் இந்த திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது என்றும்  இதில் முதல் ஆளில்லா சோதனை ராக்கெட் நடப்பாண்டு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் இந்த ராக்கெட்டில் பழ ஈக்களையும் விண்ணில் அனுப்பி சோதனை செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.

 இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யானின் முதல் பயணத்தில் இந்தியா பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளது என்றும்  ஈக்களின் ஆயுட்காலம் சுமார் 5-60 நாட்கள் என்பதால், அவை ககன்யானின் 5 முதல் 7 நாட்கள் ராக்கெட் சோதனைக்கு ஏற்றதாக இருக்கும் என்றும்  ஈக்கள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழு விண்வெளியில் செலுத்தப்படும், மற்றொன்று 2-க்கும் இடையிலான பகுதியில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதற்காக பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் தனித்தனி பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள பழ ஈக்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும். விண்வெளிப் பயணம் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கிறது? மற்றும் ராக்கெட் பயணத்தின்போது அவை என்ன வகையான உயிரியல் மாற்றங்களையும், அழுத்தங்களையும் எதிர்கொள்கின்றன? என்பதை மதிப்பிடுவதற்கு பழ ஈக்கள் பயன்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்தனர்.

மேலும் இந்த ஈக்கள் மனிதனுக்கான மரபணுவை சுமார் 75 சதவீதம் பகிர்ந்து கொள்கின்றன என்றும்  இதன் மூலம் அவற்றின் உயிரியல் நிகழ்வுகளை அறிந்து கொள்ள ஏதுவாக அமைகிறது என்றும் மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் குழு, இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யான்-1 ல் பழ ஈக்களை ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Plans to send flies into space ISRO ready for the next record!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->