அரசியலமைப்பை பிரதமர் நரேந்திர மோடி தாக்குகிறார் - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி! - Seithipunal
Seithipunal


யுபிஎஸ்சிக்கு பதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மூலம் அரசு அதிகாரிகளை நியமனம் செய்து அரசியலமைப்பை பிரதமர் நரேந்திர மோடி தாக்குவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவருர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில் ,  "மத்திய அமைச்சகங்களில் உள்ள முக்கிய பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை லேட்டரல் என்ட்ரி ஆட்சேர்ப்பு மூலம் மத்திய அரசு வெளிப்படையாகப் பறிக்கிறது.

நாட்டின் மிக உயர்ந்த அதிகார அமைப்புகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பதை ஏற்கனவே பதிவு செய்தேன்.

இந்த செயல் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் திறமையான இளைஞர்களின் உரிமைகளைப் பறிப்பதாகும், மேலும் இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதியின் மீது மத்திய அரசின் தாக்குதலாகும்.

ஒரு சில தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளை முக்கிய அரசாங்க பதவிகளில் அமர வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் செபி தலைவர் மீதான குற்றச்சாட்டு.

செபியில் முதல்முறையாக தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் தலைவராக  நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாக அமைப்பையும், சமூக நீதியையும் புண்படுத்தும் தேச விரோத நடவடிக்கையை I.N.D.I.A. கூட்டணி கடுமையாக எதிர்க்கிறது" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM arendraModi Congress Rahul Gandhi UPSC RSS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->