பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!! - Seithipunal
Seithipunal


இந்திய திரை உலகின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்ததில் அவர் மரணம் அடைந்திருக்கலாம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த 78 வயதாகும் வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,  கன்னடம், இந்தி, குஜராத்தி என 19 மொழிகளில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த 1974ம் ஆண்டு தீர்க்க சுமங்கலி என்ற திரைப்படத்தில் மல்லிகை என் மன்னன் மயக்கம் என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் முதன் முதலில் அறிமுகமானார். இவர் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மவிபூஷன் மற்றும் திரைப்பட பின்னணி பாடகர்களுக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலதரப்பட்ட மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "திறமையான வாணி ஜெய்ராம் ஜி, பல்வேறு மொழிகளை உள்ளடக்கிய மற்றும் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் செழுமையான படைப்புகளுக்காக நினைவு கூரப்படுவார். 

அவரது மறைவு படைப்புலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி" என பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi condoles for playback singer Vani Jayaram death


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->