நாளை இத்தாலி செல்லவுள்ள பிரதமர் மோடி! காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal



அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பின் மாநாடு வருடம் தோறும் நடைபெறும். 

இந்த மாநாட்டில் பிற நாடுகள் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினராக அழைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான மாநாட்டை இத்தாலி தலைமை தாங்கி நடத்துகிறது. 

இந்த மாநாடு நாளை தொடங்கி வருகின்ற 15ஆம் தேதி வரை இத்தாலையில் அபுலியா மாகாணத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளது. 

இந்த மாநாட்டில் இத்தாலி பிரதமர், அமெரிக்கா அதிபர், பிரான்ஸ் அதிபர், ஜப்பான் பிரதமர், கன்னடா பிரதமர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா உள்பட 12 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இந்தியா சார்பில் ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை இத்தாலி செல்ல உள்ளார். இந்த மாநாட்டில் பொருளாதார முன்னேற்றம், உக்ரைன்-ரஷியா போர், இஸ்ரேல் - ஹமாஸ் போர் உள்பட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi go Italy tomorrow


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->