வாரணாசியில் பிரதமர் மோடி பிரமாண்ட பேரணி! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசம், வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி மே 14ஆம் தேதி கடைசி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். 

இதனால் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சி தலைவர் அவர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு வாரணாசி உள்பட 13 தொகுதிகளில் நடைபெற உள்ளது. 

வாரணாசி எம்.பி. ஆக இரண்டாவது முறையாக தொடரும் பிரதமர் மோடி இங்கு மூன்றாவது முறையாக தற்போது போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் நேற்று முதல் வருகின்ற 14ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 

இந்நிலையில் பிரதமன் நரேந்திர மோடி கடைசி நாளான 14-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். வருகின்ற 14ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி படேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இதற்கு ஒரு நாள் முன்னதாக பிரதமர் வாரணாசி சென்று ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi grand rally in Varanasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->