"முதல் வாட்டர் மெட்ரோ சேவை"... நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி..! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மெட்ரோ ரயில் நெட்வொர்க்குடன் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் படகு சேவையான வாட்டர் மெட்ரோவை கொச்சியில் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். வாட்டர் மெட்ரோ படகு சுமார் 747 கோடி ரூபாய் மதிப்பில் ஜெர்மன் நிறுவனத்தின் உதவியுடன் கொச்சி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.

இதையடுத்து மெட்ரோ ரயில் பெட்டிகளில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் வாட்டர் மெட்ரோவிலும் கிடைக்கும் என்றும், டிக்கெட்டின் விலை 20 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரை பயணத்தைப் பொறுத்து வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாட்டர் மெட்ரோவில் 50 பேர் அமரும் வசதியுடன், சுமார் 100 பயணிகள் வரை ஏற்றி செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாட்டர் மெட்ரோ தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறும்பொழுது, வாட்டர் மெட்ரோ கேரளாவின் கனவு திட்டம் என்றும், கேரளாவின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறைக்கு மிகுந்த உற்சாகம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pm Modi inaugurate Kochi water metro on April 25


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->