உலகத்தரம் வாய்ந்த மோபா விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.!
PM Modi inaugurated the world class Mopa Airport
கோவாவில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மோபா விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
கோவாவில் ஒரே விமான நிலையம் தபோலிமில் செயல்பட்டு வந்தத நிலையில், பெர்னெம் தாலுகாவில் உள்ள மோபாவில் 2வது சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானத்திற்கான 2016ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் 2,870 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட உலகத்தரம் வாய்ந்த கோவாவின் 2வது சர்வதேச விமான நிலையத்தை இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தார்.
இந்த விமான நிலையம் சூரிய மின் நிலையம், பசுமை கட்டிடங்கள், ஓடுபாதையில் எல்இடி விளக்குகள், மழை நீர் சேகரிப்பு, மறுசுழற்சியுடன் கூடிய அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 3-டி மோனோலிடிக் பிரீகாஸ்ட் கட்டிடங்கள், ஸ்டேபில்ரோட், ரோபோமேடிக் ஹாலோ ப்ரீகாஸ்ட் சுவர்கள், 5ஜி இணக்கமான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு போன்ற சில சிறந்த இன் கிளாஸ் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.
மேலும் இந்த விமான நிலையத்தில் இரவில் விமானம் நிறுத்தும் வசதி, சரக்கு முனையம் ஆகியவையும் புதிதாக அமைகின்றன.
English Summary
PM Modi inaugurated the world class Mopa Airport