கார்கில் 25 ம் ஆண்டு நினைவு தினம் - பிரதமர் மோடி இன்று காலை கார்கில் பயணம் ..! - Seithipunal
Seithipunal



பாகிஸ்தானுடனான கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி இன்று காலை கார்கில் பயணம் செல்லவுள்ளார். 

இன்று காலை 9.20 மணிக்கு கார்கில் செல்லவுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள போர் நினைவிடத்திற்குச் சென்று, நினைவஞ்சலி செலுத்த உள்ளார். பாகிஸ்தானுனடனான போரின் போது உயிர் நீத்த வீரர்களின் நினைவாக கார்கிலில் எழுப்பப் பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். 

மோடி பிரதமரான பிறகு, வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை கார்கிலில் உள்ள ராணுவ வீரர்களுடன் தான் கொண்டாடுவார். ஆனால் இந்த முறை கார்கில் போர் முடிந்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதால் , இந்தியா , கார்கில் போரில் வெற்றி பெற்ற நாளான இன்று (ஜூலை 26) அங்கு செல்ல உள்ளார் என்றும், மேலும் கார்கில் ராணுவ முகாமில் உள்ள வீரர்களுக்கு இனிப்பு வழங்கி இந்த வெற்றி நாளைக் கொண்டாட உள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து பிரதமர் மோடி அங்குள்ள ஷின்குன் லா என்ற சுரங்கப் பாதை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த சுரங்கப் பாதையானது சுமார் 4.1 கி. மீ நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப் பாதை ஆகும். இதுவே உலகின் மிக அதிக நீளமான சுரங்கப் பாதையாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. விரைவில் இது கட்டி முடிக்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Pay Tributes In Kargil War 25th Memorial Day


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->