உலகம் தீவிரவாதத்தின் கோர முகத்தை உணரும் முன்னரே இந்தியா சந்தித்துவிட்டது - பிரதமர் மோடி - Seithipunal
Seithipunal


'தீவிரவாதத்திற்கு நிதி இல்லை' என்ற கருப்பொருளில் தீவிரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் 3வது அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. 

இந்நிலையில், தொடக்க நாளான இன்று மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்யும் வேரைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். மேலும் தீவிரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் அதே ஒரு மாதிரியான கண்டனத்துக்கு உரியது தான். அனைத்து பயங்கரவாதத் தாக்குதல்களும் சமமான சீற்றத்திற்கும், நடவடிக்கைக்கும் தகுதியானவை.

இந்த உலகம் தீவிரவாதத்தின் கோர முகத்தை உணரும் முன்னரே இந்தியா அதன் தாக்கத்தை வெகு காலத்திற்கு முன்னர் சந்தித்துவிட்டது. இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்களில், வகைகளில் தீவிரவாதம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதில் ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் தீவிரவாதத்துக்கு இழந்துள்ளோம். ஆனாலும் நாம் துணிச்சலுடன் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியுள்ளோம். ஒரே ஒரு தாக்குதல் என்றாலும் அது தீவிரவாதம் தான். ஒரே ஒரு உயிர்ப்பலி என்றாலும் அது பெரிய இழப்பு தான். அதனால் தீவிரவாதம் வேரறுக்கப்படும் வரை நாம் ஓயக்கூடாது. 

மேலும் தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் பகுதியில் தொழில் முதலீடு செய்ய யாரும் விரும்புவதில்லை என்றும், அதனால் அந்தப் பகுதி வாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pm Modi says India has faced terrorism before the world has seen it


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->