மேஷ ராசியில் பிறந்தவர்கள் இப்படிப் பட்டவர்களா? முழு விபரம் உள்ளே..1
Characteristics of people born under the sign of Aries
12 ராசிகளில் முதல் ராசி மேஷம். இந்த ராசிக்கார்களின் பொதுவான குணங்கள் எப்படி இருக்கும் என்பதை இந்த பதில் பார்க்கலாம். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். ராசியில் அஸ்வினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் ஆகியவை இடம் பெறுகின்றன.
மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக நேர்மையாக இருக்க விரும்புவார்கள். இவர்களுக்கு பொய் பித்தலாட்டம் செய்பவர்களை கண்டால் பிடிக்காது. இவர்களுக்கு மற்றவர்கள் கஷ்டபடுவதை கண்டால் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள். உடன் பழகுபவர்களில் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள் யார்? என்பதை சுலபமாக கண்டு பிடித்து விட கூறியவர்கள் இந்த மேஷ ராசிகாரர்கள்.
![](https://img.seithipunal.com/media/aries-c5qfb.jpg)
இவர்கள் நடுத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும் கொண்டவர்கள். பொதுவாகவே நிமிர்ந்த நேரான நடையும், கணிந்த பார்வையும் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரின் பார்வைக்கு வெகுளியானவர் போல காட்சியளித்தாலும், நல்ல தீர்கமான ஆயுளும், தெய்வ பக்தியும் கொண்டவர்களாகஇருப்பார்கள். இவர்களுக்கு பொறுமை என்பதே கிடையாது. நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு கொண்டவர்கள். இதனால் சில பிரச்சனைகளையும் அடிக்கடி சந்திப்பார்கள்.
இவர்கள் வீரம், கோபம் அதோகம் நிறைந்தவர்கள். மற்றவர்களை அடக்கி ஆட்சி செய்வதிலும், அதிகாரம் செலுத்துவதிலும், வீர தீரமான செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பார். பிறரை நிர்வகிக்கும் நிர்வாக திறமை கொண்டவர்கள். எதிலும் முதன்மையாக இருப்பார்கள். இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி பேச கூடியவர்கள்.
![](https://img.seithipunal.com/media/aries 2-l83py.jpg)
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் உதவி செய்வதற்கு தயாராக இருக்க கூடியவர்கள்தான் இந்த மேஷ ராசிக்காரர்கள். நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். தான் சொல்வதே சரி சரி என வாதிட கூடியர்வர்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள் இவர்கள். இவர்கள் தைரியமானவர்கள் என்பதால் எல்லா விஷயத்தையும் சமாளித்து விடும் ஆற்றலை பெற்றிருப்பார்கள். கௌரவத்தை ஒரு நாளும் விட்டு கொடுக்காதவர்களாக இருப்பார்கள்.
தான் ஏற்று கொண்ட பணிகளில் எவ்வளவு தடைகள் வந்தாலும் பொறுமையுடன் இருந்து அதை முடித்தும் காட்டுவார்கள். இவர்களுக்கு அதிகம் கோபம் வருவதால், மன அமைதியை இழந்து விடுவார்கள். இவர்களில் சிலர் தான் என்னும் அகங்கார குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரை கலந்தாலோசிக்காமல் தானே சுயேச்சையாக முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள் இந்த மேஷ ராசியில் பிறந்தவர்கள்.
English Summary
Characteristics of people born under the sign of Aries