இலங்கையின் முன்னாள் எம்.பி. திலீபன் கொச்சியில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைப்பு..!
Former Sri Lankan MP Thileepan arrested in Kochi and imprisoned
இலங்கை முன்னாள் எம்.பி. திலீபனை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். போலியான முகவரி கொடுத்து பாஸ்போர்ட் எடுத்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற இலங்கையின் ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அங்கிருந்து மற்றொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில், இந்தியாவின் கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் வைத்து தமிழகப் பொலிஸாரால் திங்கட்கிழமை (10) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
![](https://img.seithipunal.com/media/dilipan-ts9sr.jpg)
2019-ஆம் ஆண்டில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் போலி முகவரியைக் கொடுத்து மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற்ற வழக்கில், இலங்கையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னாள் எம்.பி. திலீபன் மீது இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த 10-ஆம் தேதி கொச்சி விமான நிலையம் வந்த திலீபனை குடியுரிமை அதிகாரிகள் பிடித்து, மதுரை க்யூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
English Summary
Former Sri Lankan MP Thileepan arrested in Kochi and imprisoned