எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு அவர்களின் தரத்தை காட்டுகிறது - பிரதமர் மோடி
PM Modi says Opposition members speech shows their quality
பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்பொழுது, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிப்பதுடன், அவருக்கு வாழ்த்தும் தெரிவிக்கிறேன். தொலைநோக்கு சிந்தனையுடன் ஜனாதிபதி தனது உரையை வழங்கியிருக்கிறார். அவரது உரை நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் உள்ளது.
மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு அவர்களின் தரத்தை காட்டுகிறது. இதில் ராகுல் காந்தி நேற்று பேசும்போது அவையில் ஒருவித கொதிநிலை காணப்பட்டது என்றும், வருங்காலத்தில் காங்கிரசின் வீழ்ச்சி குறித்து உலக பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்யும் என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர், பாராளுமன்றத்தில் ஒவ்வொருவரும் தங்களின் புரிதலுக்கு ஏற்ப, தங்களின் குணநலனுக்கு ஏற்றவாறு உரையாற்றினர் என்று தெரிவித்தார். மேலும் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் காண்கின்றன என்றும், இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் மோடியின் உரையை பாஜக எம்.பி.க்கள் கைதட்டி வரவேற்றனர். ஆனால் பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தொரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் அவர்களை அமைதிகாக்கும்படி அவைத்தலைவர் அறிவுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
PM Modi says Opposition members speech shows their quality