வெளிநாட்டுப் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்! பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


நாம் வெளிநாட்டுப் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜெயின் சர்வதேச வணிக அமைப்பின் மாநாட்டை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர், நாம் வெளிநாட்டு பொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். அவற்றின் மீதான அடிமைத்தனத்தையும் குறைக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் ஏற்றுமதிக்கான புதிய வழிகளை கண்டறிந்து உள்ளூர் சந்தைகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

இந்திய அரசுக்கு மக்களின் ஆதரவும், முயற்சி செய்யும் மன உறுதியும் இருக்கும் வரை மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகும். 

இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், இயற்கை விவசாயம், உணவு பதப்படுத்துதல், தொழில் நுட்பம், சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு இந்தியனும் நம் நாட்டின் மீதான உலகின் நம்பிக்கையை குறித்து பெருமிதம் அடைய வேண்டும். இதை சமீபத்தில் நான் வெளிநாட்டு பயணத்தின் போது உணர்ந்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM modi says to reduce foreign goods


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->