'இளைஞர்கள் தங்களது எண்ணங்களை எனக்கு அனுப்ப வேண்டும்' - பிரதமர் மோடி பேச்சு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா, தானேவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியிருப்பதாவது, 

அரசு அமைந்த பிறகு முதல் 100 நாட்களில் என்னென்ன வேலைகளை செய்ய வேண்டும், என்னென்ன முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதில் தொடர்ந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம். 

நேற்று காசியில் இருந்தபோதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதும் பல இளைஞர்களை சந்தித்தேன். இளைஞர்களிடம் புதிய கற்பனை, சிந்தனைகள் இருப்பதை கண்டேன். 

இளைஞர்களை சந்தித்த நாட்கள் எனக்கு மிகவும் நல்ல ஆலோசனைகளை வழங்கி உள்ளது. இன்னும் 25 நாட்கள் இணைந்துள்ளேன். 

நாட்டின் இளைஞர்கள் தங்களது மனதில் தோன்றும் எண்ணங்களை எனக்கு அனுப்ப வேண்டும் என விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi says Youth thoughts send me


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->