நீட் குறித்து கவன ஈர்ப்பு மசோதா! விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் - ராகுல் காந்தி! - Seithipunal
Seithipunal


நீட் குறித்து விவாதம் நடத்த கவன ஈர்ப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நீட் தொடர்பான விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இதுவரை இல்லாத அளவிற்கு 67 மாணவர்கள் 720க்கு 720 என்று முழுமதிப்பெண்ணை பெற்றது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அரியானா மாநிலத்தில் ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 7 பேர் முழுமதிப்பெண் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனையடுத்து நீட் தேர்வை  நடத்தும் தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக பாராளுமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் பாராளுமன்றத்தில் நீட் குறித்து விவாதம் நடத்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.

மக்களவைக்கு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பேசுகையில், எதிர்க்கட்சிகள்  சேர்ந்து அனைத்து கட்சி தலைவர்களும் நேற்று கூட்டம் நடத்தினோம். அந்த கூட்டத்தை நேற்று நீட்  பற்றிய ஆலோசனை நடத்தினோம் பாராளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும். இந்த விவாகரத்தில் நாட்டின் இளைஞர்கள் தொடர்பாக ஒன்று என்பதால் இதனை முறையாக விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi should participate in NEET debate Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->