சிவமொக்கா விமான நிலையம்: நாளை மறுநாள் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் சிவமொக்கா நகரை ஒட்டிய சோகானே பகுதியில் ரூபாய் 442 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தை நாளை மறுநாள் 27ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். சிவமொக்கா விமான நிலையத்திற்கு முன்னாள் கர்நாடக முதல்வர் பிஎஸ் எடியூரப்பா அடிக்கல் நாட்டினார்.

மேலும் 662.38 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் ஓடுபாதை, முனைய கட்டிடம், ஏடிசி கோபுரம் மற்றும் தீயணைப்பு நிலைய கட்டிடம் தவிர, இது ஒரு டாக்ஸிவே, ஏப்ரான், அணுகுமுறை சாலை, புற சாலை மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் வருகையையொட்டி சிவமொக்காவில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும், விமான நிலையம் அமைந்துள்ள பகுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி ட்விட்டரில், சிவமொக்கா விமான நிலையம் வர்த்தகம், இணைப்பு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi to inaugurate Sivamokka airport the day after tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->