பீகார் செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடி! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி பயணத்தை தொடர்ந்து வருகின்ற ஜூன் 19ஆம் தேதி பீகாரருக்கு செல்ல உள்ளார். ராஜ்கிர் பகுதியில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைக்க உள்ளார். 

இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பில் உருவாகியுள்ள வளாகத்தின் திறப்பு விழாவில் 17 நாடுகளின் தூதர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

இரண்டு கட்டப் பிரிவுகளுடன் கூடிய இந்த வளாகத்தில் மொத்தம் 1900 வசதியுடன் 40 வகுப்பறைகளும், 300 இருக்கைகளுடன் இரு கலை அரங்குகளும் உள்ளது. 

550 மாணவர்கள் தங்கும் வசதி கொண்ட விடுதி, சர்வதேச மையம் 2000 பேர் கலந்து கொள்ளும் வகையிலான திறந்தவெளி அரங்கம், ஆசிரியர் மன்றம், விளையாட்டு வளாகம் உள்ளிட்ட பல்வேறு அங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

சூரியனின் உற்பத்தி அமைப்பு, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவு நீர் மறுசுழற்சி நிலையம், 100 ஏக்கரில் நீர்நிலைகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகளுடன் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi visit Bihar


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->