குஜராத் || மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் மோடியின் பெயர் - மாநகராட்சி அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நேற்று, குஜராத் மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரி ஒன்றுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படுவதாக, அறிவிக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, ஆமதாபாதில் மாநகராட்சிக்குச் சொந்தமான மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனை வளாகத்தில், ஒரு மருத்துவக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்,நேற்று  ஆமதாபாத் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், மாநகராட்சி தலைவர் ஹிதேஷ் பரோத், ''மாநகராட்சி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மருத்துவக் கல்லுாரிக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படும்," என்று அறிவித்தார்.

சென்ற ஆண்டு, ஆமதாபாதில் கட்டப்பட்ட பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டதை தொடர்ந்து, தற்போது மருத்துவக் கல்லுாரிக்கும் அவரது பெயர் சூட்டப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi's name for medical college


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->