இந்தியாவின் ஜி20 கூட்டறிக்கைக்கு ஒப்புதல்! பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியா தலைமை தாங்கி நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மற்றும் நாளை நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி 20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் காலநிலை மாற்றம் பொருளாதார மேம்பாடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே குடும்பம் மற்றும் ஒரே பூமி என்ற தலைப்பில் 2 கட்டங்களாக இந்த ஆலோசனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி "இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியத்தை நிரந்தர உறுப்பினராக்க இந்தியா முன்வந்துள்ளது. ஆப்பிரிக்க யூனியன் 55 நாடுகளை உள்ளடக்கியது, இதனால் ஜி 20 கூட்டமைப்பு இரண்டாவது பெரிய குழுவாக மாற்றமடையும். 

ஜி20 மாநாட்டுக்கான கூட்ட கூட்டணிக்கைக்கு அனைத்து உறுப்பினர்களும் நாடுகளும் மனதார ஒப்புதல் வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய தூதரக அதிகாரிகள் இணைந்து பல்வேறு நாட்டின் தூதர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜி 20 கூட்டணிக்கைக்கு ஒப்புதல் வழங்கியது குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி "தற்போது எனக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. எங்கள் குழுவின் கடின உழைப்பின் காரணமாக ஜி 20 தலைவர்களின் உச்சி மாநாட்டின் கூட்டறிக்கைக்கு ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMModi announced India G20 joint statement approved


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->