ஓடும் பைக்கில் சாகசம் செய்த வாலிபர் - போலீசார் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் லைக்குகளை குவிக்க ஆசைப்பட்டு இளைஞர்கள் தங்களது வாகனங்களில் சாகசம் செய்து வருகின்றனர். இதனை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். இந்தச் செயலை செய்ய வேண்டாம் என்று போலீசாரும் எச்சரித்துள்ளனர். 

இந்த நிலையில், கான்பூர் நகரின் நவாங்கஞ்ச் பகுதியில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சாகச பயணம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்லும் போது திடீரென அதன் மீது நின்று பயணம் செய்கிறார். 

அப்போது டைட்டானிக் படத்தில் கதாநாயகன் கப்பலில் நிற்பதை போன்று 'போஸ்' கொடுத்தவாறு மோட்டார் சைக்கிளில் சாகச பயணம் செய்த காட்சிகள் பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து உன்னாவ் போலீசார் அந்த வாலிபர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police fine to youth for bike stunt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->