தேஜஸ்வி வீட்டின் முன்பு நள்ளிரவில் குவிந்த போலீசார் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள ராஷ்டீரிய ஜனதாதள கட்சியுடனான உறவை நிதிஷ் குமார் கடந்த ஜனவரி இறுதியில் முறித்து கொண்ட பா.ஜ.க.வுடன் கைகோர்த்து 9-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.

இதன் தொடர்ச்சியாக, பீகார் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில், ராஷ்டீரிய ஜனதாதள தலைவர்களில் ஒருவரும் மற்றும் பீகார் முன்னாள் துணை முதலமைச்சரான தேஜஸ்வி யாதவின், பாட்னா நகரில் உள்ள வீடு முன்பு நள்ளிரவில் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், ஆயிரக்கணக்கான போலீசாரை நிதிஷ் குமார் அனுப்பி வைத்திருக்கிறார். தேஜஸ்வியின் வீட்டை சுற்றி அனைத்து பகுதிகளிலும் அவர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஏதேனும் கூறி அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து, எம்.எல்.ஏ.க்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த விரும்புகின்றனர் என தெரிவித்து உள்ளது. பீகார் மக்கள் இதனை கவனித்து கொண்டிருக்கின்றனர். 

பயந்துபோய், குனிந்து செல்பவர்கள் நாங்கள் அல்ல என நினைவில் கொள்ளுங்கள். கொள்கைக்கான இந்த போராட்டத்தில் நாங்கள் போராடி, வெல்வோம். ஏனெனில், போலீசாரின் இந்த ஒடுக்குமுறையை, நீதியை விரும்பும் மக்கள் எதிர்ப்பார்கள் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police guard in thejeshvi yadav house in bihar


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->