பெற்றத் தந்தையை ட்ராக்டர் ஏற்றிக் கொன்ற கொடூர மகன் - ஆந்திராவில் பரபரப்பு.!!
police investigation man kill parents in andira for property issue
ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்பலநாயுடு-ஜெயம்மா தம்பதியினர். இவர்களுக்கு ராஜசேகர் என்ற மகன் உள்ளார். இவர்களுக்கு சொந்தமாக நிலமுள்ளது. இந்த நிலத்தை ராஜசேகர் விற்பனை செய்ய முயன்றார்.
ஆனால், அதற்கு அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், ராஜசேகர் நேற்று மாலை பிரச்சனைக்குரிய நிலத்தை டிராக்டர் மூலமாக சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இதையறிந்து அங்கு வந்த அவரது பெற்றோர், அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர், பெற்றோர் என்றும் பார்க்காமல் இருவர் மீதும் டிராக்டரை ஏற்றி கொன்று விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் தலைமறைவாகியுள்ள ராஜசேகரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். சொத்து தகராறில் நடந்த இந்த பயங்கர சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police investigation man kill parents in andira for property issue