பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் விறுவிறு.. ஆண்டிபட்டியில் அதிமுக ஆலோசனை.!
The work of setting up the booth committee is in full swing AIADMK consultation in Andipatti
தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்கள், ஆண்டிபட்டி பேரூர் கழகம் சார்பாக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆலோசனையின் பேரில் தேனி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தற்போது பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்கள் மற்றும் ஆண்டிபட்டி பேரூர் கழகம் சார்பாக புதிய கிளைக் கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு,அவர்கள் மூலமாக தலா 9 பேர் கொண்ட பூத் கமிட்டி தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. கூட்டத்திற்கு ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமை தாங்கினார் .கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், பேரூர் செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும்,தேனி கிழக்கு மாவட்ட பூத்கமிட்டி பொறுப்பாளருமான ரதிமீனா சேகர் மற்றும் தேனி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முருக்கோடை ராமர்,மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கி ஆய்வு செய்தனர். கூட்டத்தில் ஆண்டிபட்டி மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய , நகர, கிளை கழக ,சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
English Summary
The work of setting up the booth committee is in full swing AIADMK consultation in Andipatti