நெருப்பு மூட்டி குளிர்காய்ந்த சிறுமிகள் திடீர் உயிரிழப்பு - போலீசார் தீவிர விசாரணை.!
police investigation three girls died in gujarat
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்த 4 சிறுமிகள் நேற்று முன்தினம் மாலை தங்களின் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குளிர் அதிகமாக இருந்ததால் சிறுமிகள் அங்கிருந்த குப்பைகளை கூட்டி நெருப்பு மூட்டி குளிர் காய்ந்துள்ளனர்.
அப்போது சிறுமிகள் திடீரென வாந்தி எடுத்ததுடன் மயங்கி விழுந்தனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிறுமிகள் 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு சிறுமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சிறுமிகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுமிகளின் உயிரிழப்புக்கு குறித்து விசாரித்ததற்கு உறவினர்கள் மாறுபட்ட காரணங்களை கூறுகின்றனர்.
இதனால், பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே உறுதியான தகவல் தெரியவரும் என்றும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
police investigation three girls died in gujarat