பெங்களுருவில் இன்று போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு.!
police permission denial to bangluru banth
பெங்களுருவில் இன்று போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு.!
கர்நாடக மாநில அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய பங்கு நீரை விடுவிக்க கர்நாடக மாநில அரசு மறுத்த நிலையில் தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டது.
இதனை அடுத்து கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு நாள்தோறும் விநாடிக்கு 5000 கன அடி நீ திறக்க வேண்டும் என காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
மேலும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடங்கபட்ட வழக்கிலும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவிலும் தலையிட முடியாது என்றும், ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவை இரு மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனால் கர்நாடகாவில் விவசாய சங்கங்கள் மற்றும் கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெங்களூரில் இன்று பந்த் நடத்த காவல் துறை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை தெரிவித்துள்ளதாவது, அசம்பாவிதங்களை தடுக்க பெங்களூரில் இன்று 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் இன்று வழக்கம்போல் பிஎம்டிசி, கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள், மெட்ரோ ரயில்,ஓலா, உபர், ஆட்டோக்கள் வழக்கம் இயங்கும்.
இதேபோல், இன்று ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் வழக்கம்போல் இயங்க உள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக இன்று பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
police permission denial to bangluru banth