பரபரப்பான பெங்களூரு.. சித்தராமையா வீட்டின் முன் போலீஸ் படை.. வெளியான பரபரப்பு தகவல்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி கர்நாடகா அரசியலில் கடந்த 4 நாட்களாக நீடித்து வருகிறது. முதல்வர் போட்டியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் உள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் டெல்லி தலைமை கர்நாடகாவின் அடுத்த முதல்வரை நியமிக்க அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் பதவியில் சித்தராமையா நியமிக்கப்பட உள்ளதாக டெல்லி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேற்று இருவரும் தனித்தனியே சந்தித்து பேசிய நிலையில் ராகுல் காந்தியையும் இன்று இருவரும் தனித்தனியாக சந்தித்து பேசி உள்ளனர்.

இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் கர்நாடகாவின் அடுத்த முதல்வரின் பெயரை அறிவிக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும் டி.கே சிவக்குமார் துணை முதல்வர் பதவியும் வழங்க டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து பெங்களூரு குமரகிருபா சாலையில் உள்ள சித்தராமையாவின் இல்லத்தைச் சுற்றி திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

கர்நாடக முதல்வர் குறித்தான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ள சம்பவம் பெங்களூரு சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநில முதல்வர் பதவிக்கு சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் மற்ற தலைவர்களின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தலாம் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police security has been deployed at Siddaramaiah house


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->