மாணவர்களுக்கு பாதி விலையில் நோட் புக் - போட்டி போட்டு கடை அமைக்கும் அரசியல் கட்சிகள்.!!
political parties open note book shop in maharastra
மாணவர்களுக்கு பாதி விலையில் நோட் புக் - போட்டி போட்டு கடை அமைக்கும் அரசியல் கட்சிகள்.!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியில், சலுகை விலையில் எழுதுபொருட்கள் விற்பனை திடீர் அங்காடிகளில் பரபரப்பாக செல்கிறது. அங்கு விலை உயர்ந்த பிரபல நிறுவனங்களின் தயரிப்புகளுக்கு 20 சதவீதத்தில் தொடங்கி, உள்ளூர் தயாரிப்புகளுக்கு 40 சதவீதம் வரை விலைகுறைப்பில் எழுதுபொருட்களை வழங்குகிறார்கள். மேலும் சில எழுதுபொருட்களை 50 சதவீத தள்ளுபடியில் அதாவது பாதி விலையில் தருகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் எழுதுபொருட்களின் விலை அதிகரித்து வருவதால், கல்வியாண்டின் தொடக்கத்தில் அவற்றை மொத்தமாக விலைகொடுத்து வாங்குவது சாமானியர்களுக்கு சவாலாக மாறிப் போகிறது. மகாராஷ்டிரா அரசியல் கட்சிகளின் இந்த விலைக்குறைப்பு சேவையால், எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் பலனடைந்து வருகின்றனர்.
அரசியல் கட்சிகளின் இந்த சலுகை விலை எழுது பொருட்கள் அங்காடிகள் சில தினங்களுக்கு மட்டுமே செயல்படும். ஆனால், இந்த முறை மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, சுமார் ஒன்றரை மாதங்களுக்கு விற்பனையை நீட்டித்துள்ளனர்.
அரசியல் கட்சிகளின் திடீர் கடைகளால், வழக்கமாக எழுதுபொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு பாதிப்பு என்றபோதும், சமூக சேவையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை ஆட்சேபிக்க வேறு வழியில்லாமல் அமைதி காக்கிறார்கள். சிவசேனா, பாஜக உட்பட பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ்வாறு பள்ளிப் பிள்ளைகள் மீதான கரிசனத்தில் முனைப்பு காட்டுகின்றன.
English Summary
political parties open note book shop in maharastra