இன்றே கடைசி நாள்..!! சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் இணைய அரசு பள்ளிகளுக்கு உத்தரவு..!
Pondicherry govt order Govt schools to join in CBSC syllabus
சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் சேர புதுச்சேரி அரசு பள்ளிகள் விண்ணப்பிக்க வேண்டுமென புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் எடுக்கப்படும் முடிவுகள் மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகு நிறைவேற்றப்படுகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழக அரசின் பாடத்திட்டம் பின்பற்றி அரசு பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் இணைய விண்ணப்பிக்குமாறு அரசு பள்ளிகளுக்கு புதுச்சேரி பள்ளி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். சி.பி.எஸ்.சி பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு தேவையான ஆவணங்களை அனைத்து பள்ளிகளும் இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
Pondicherry govt order Govt schools to join in CBSC syllabus