பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்.!
Prajwal Revanna 14 day court custody
கர்நாடகத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள், பெண் கடத்தல் வழக்குகள் தொடர்பாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரேவண்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க இன்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் பவானி ரேவண்ணாவுக்கு முன் ஜாமின் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Prajwal Revanna 14 day court custody