பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமின் மனு! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
Prajwal Revanna Bail application dismissed
ஹாசன் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் எச்.டி. ரேவண்ணா. இவரது மனைவி பவானி ரேவண்ணா. இவர்களது மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா.
ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி ஆக இருந்தவர் ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு புலனாய்வு போலீசாரால் கைது செய்யப்பட்டு ரேவண்ணா கடத்தியதாக போலீசார் கைது செய்தனர்.
தற்போது அவர் மற்றும் அவரது மனைவி இருவரும் ஜாமினில் வெளிவந்துள்ளனர். இந்நிலையில் பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் வந்த போது, பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல் வழக்கில் இன்னும் ஜாமின் கிடைக்காத நிலையில் பிரஜ்வல் மீது ஆபாச வீடியோ, பாலியல் தொல்லை, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Prajwal Revanna Bail application dismissed