பிரஜ்வலின் அதிரடி அறிவிப்பு... விமான நிலையத்தில் குவிந்த ஏராளமான போலீசார்.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


இந்திய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் பா.ஜ.க கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் கட்சி எம்.பியுமான பிரஜ்வால் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் புகார் அளித்ததால் இறைவன் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க ஜெர்மனிக்கு சென்று விட்டார். 

பாதிக்கப்பட்ட பெண்களுள் ஒருவரை பிரஜ்வலின் தந்தையான ரேவண்ணா கடத்திய குற்றத்திற்கு அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தார். 

இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடகா ஆளும் காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது. இதற்கிடையே பிரஜ்வலை நாடு திரும்பறு அவரது தாத்தா தேவகவுடா எச்சரிக்கை விடுத்தார். 

இந்நிலையில் நாளை மறுநாள் நாடு திரும்பவுதாக பிரஜ்வால் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதன்படி நாளை ஜெர்மனி தலைநகரில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் பிரஜ்வால் வர உள்ளதால் அவரை கைது செய்ய போலீசார் விமான நிலையத்தில் தயாராக உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prajwal Revanna come India issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->