பள்ளி மாணவர்களுக்கு கட்டாயத் தொழுகை - மாநில அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவர்களுக்கு கட்டாயத் தொழுகை - மாநில அரசு அதிரடி உத்தரவு.!

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் கட்லோடியா பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் வெவ்வேறு மதங்களின் நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக சமீபத்தில் மாணவர்களைக் கட்டாயமாக தொழுகை நடத்த வைத்துள்ளனர்.

இந்தத் தொகுதி குஜராத் முதல்வர் பூபேந்திர படேலின் சொந்த தொகுதியாகும். தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களைப் பள்ளி நிர்வாகம் தொழுகை நடத்த வைத்ததைத் தொடர்ந்து அந்தப் பள்ளிக்கு எதிராக இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. 

மேலும், ஆசிரியர் ஒருவரை சிலர் அடிப்பது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், மாணவர்களைத் தொழுகை நடத்த கட்டாயப்படுத்தவில்லை என்று பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குஜராத் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prayers in gujarat school state government enquiry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->