குழந்தை பிறந்தபின் பெண்ணின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்கள்! காத்திருந்த அதிர்ச்சி!
pregnant woman happened Tragedy
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் உள்ள அச்சம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரிக்யா. இவரது மனைவி ரோஜா (வயது 22) நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த 15 ஆம் தேதி அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சென்றிருந்தார்.
இவருக்கு சுகப்பிரசவத்தில் சிரமம் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வயிற்றிலிருந்து எடுத்தனர்.
ரோஜா தொடர்ந்து 3 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து, பின்னர் வீட்டிற்கு சென்றார். ரோஜா வீட்டிற்கு வந்ததும் வயிறு வலி மற்றும் தையல் போட்ட இடத்தில் ரத்தக் கசிவு போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த ரோஜாவின் குடும்பத்தினர் அவரை மீண்டும் அதே அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு ரோஜாவின் வயிற்றை ஸ்கேன் செய்த போது பஞ்சு வயிற்றில் இருந்தது.
வயிற்றில் தையல் போடும்போது தெரியாமல் பஞ்சு வைத்து தைத்தது தெரிய வந்துள்ளது. பின்னர் ரோஜாவை மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் வேறொரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் ரத்தக்கசிவு தொடர்ந்து வந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரோஜாவை சேர்த்தனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். ரோஜாவின் சடலத்துடன் உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சர், கர்ப்பிணி பெண் உயிரிழப்பு குறித்து தொடர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
English Summary
pregnant woman happened Tragedy