33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.!
President approves 33 percentage women reservation bill
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு நேற்று குடியரசு துணைத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் மத்திய அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியது.
இதனை தொடர்ந்து இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஒப்புதல் அளித்துள்ளார். அதற்கான அரசிதழை மத்திய சட்டத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
English Summary
President approves 33 percentage women reservation bill