கோரமண்டல் ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி முர்மு இரங்கல்.! - Seithipunal
Seithipunal


கோரமண்டல் ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி முர்மு இரங்கல்.!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் பாஹானாகா ரெயில் நிலையம் அருகே பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட மூன்று ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரைக்கும் 233 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இருப்பினும், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பல அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், இந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நாட்டின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

"ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். மீட்புப்பணிகள் வெற்றி அடையவும், காயம் அடைந்தவர்கள் விரைவாக நலமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

president dravubathi murmu condoles to coromandal train accident death peoples family


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->