மக்களவை தேர்தல்: ஜனநாயக கடமையை ஆற்றிய ஜனாதிபதி.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று ஆறாம் கட்ட தேர்தல் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இதில் டெல்லி உள்பட 7 தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகளும், ஹரியானாவில் பத்து தொகுதிகளும், பீகார், மேற்கு வங்காளத்தில் தலா 8 தொகுதிகளும், ஒடிசா 6 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீரில் 1 தொகுதியும் என 58 தொகுதிகள் அடங்கும். 

மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்கு பதிவு நடைபெறுகிறது. காலையில் 7:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை  6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 

இதனால் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தான் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, காலை 9 மணி அளவில் டெல்லி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். 

மேலும் துணை ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி இருவரும் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றின் தங்களது வாக்குகளை செலுத்தினர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

president Dravupati Murmu voting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->