குடியரசு தலைவர் உரையில் இடம் பெற்ற சிறப்பு அம்சங்கள்..!!
President dropadi murmu speech in parliament highlights
நாடாளுமன்ற பொது தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் இன்று மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட்டை நாளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார் இந்த நிலையில் வருடத்தின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது.
இதற்கு முன்னதாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பாரம்பரிய முறைப்படி ராஷ்டிரபதி பவானியில் இருந்து சாரட் வண்டியில் வந்து இறங்கிய குடியரசுத் தலைவரை செங்கோல் ஏந்தியவாறு பிரதமர் நரேந்திர மோடி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்றனர். அதனை தொடர்ந்து மக்களவையில் பற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம் என்ற பேச்சுடன் தனது உரையை தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர் எவ்வளவு இடர்பாடுகள் இருந்தாலும் இந்தியா தொடர்ந்து முன்னேற்ற பாதையில் பயணிக்கிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம். அறிவித்த திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை எடுக்கிறது. வேலை வாய்ப்புகளை அதிகரிக்க அரசு தொடர்ந்து முன்னெடுப்புகளை மேற்கொள்கிறது.
கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக 7.5 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. நிலவின் தென் துருவத்தில் கொடி ஏந்திய முதல் நாடு இந்தியா என்ற பெருமை பெற்றுள்ளது.
ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று பல நூற்றாண்டுகளாக இருந்த ஆசை இன்று நிறைவேறியுள்ளது அயோத்தியில் ராமர் கோவில் அமைந்தது பெருமிதத்திற்கு உரியது. வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்துள்ளதால் சுற்றுலா வருவாய் அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலா துறையை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறத.
உலக அளவில் எங்கு தீவிரவாதம் தலையெடுத்தாலும் இந்தியா முதல் நாடாக எதிர்க்கும். டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு வலிமை சேர்த்துள்ளது. உலக அளவில் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது. கடந்த மாதம் மட்டும் 1200 கோடி அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்தது புதிய சாதனையாக அமைந்துள்ளது.
2 கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. மத்திய அரசின் சுய உதவி திட்டங்களில் 10 கோடி பெண்கள் இணைந்துள்ளனர். இளைஞர்கள் மகளிர் விவசாயிகள் ஏழைகளின் முன்னேற்றத்தில் அரசு கவனம் செலுத்தி வருகிறது சர்வதேச அளவில் பொருளாதார மன்ற நிலை ஏற்பட்ட போதிலும் மக்களுக்கு அது பாதிக்காத வகையில் அரசு செயல்பட்டது.
இந்தியாவில் நிலவும் சாதகமான சூழலால் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கிறது. மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து வளர்ந்து வருகிறது. மின்னணு ஆட்டோ மொபைல் துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது" என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்
English Summary
President dropadi murmu speech in parliament highlights