குடியரசு தின விழா : நாட்டு மக்களுக்கு முதல் முறை உரையாற்றும் ஜனாதிபதி.!
president murmu speach for republic day
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 26-ந் தேதி குடியரசுத் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், நாளை டெல்லியில் நாட்டின் 74-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடபடவுள்ளது.
அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தவிழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இன்று உரை ஆற்ற உள்ளார்.
இது தொடர்பாக நேற்று ஜனாதிபதி மாளிகை அறிக்கை ஒன்றை விடுவித்தது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "நாட்டு மக்களுக்கு நாளை (25-ந் தேதி) இரவு 7 மணிக்கு குடியரசுத்தலைவர் உரை ஆற்றுகிறார். இந்த உரையை அகில இந்திய வானொலி தனது அனைத்து அலைவரிசையிலும் நேரடியாக ஒலிபரப்பு செய்கிறது.
இதேபோல், தூர்தர்ஷன் தொலைக்காட்சியும் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இந்தியில் அமைந்த இந்த உரையைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் வரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தூர்தர்ஷன் தொலைக்காட்சி இந்த உரையை தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் ஒளிபரப்பும்.
மேலும், அகில இந்திய வானொலியிலும் ஜனாதிபதி உரை இரவு 9.30 மணிக்கு மாநில மொழிகளில் ஒலிபரப்பாகிறது. குடியரசுத் தலைவர் முர்மு பதவி ஏற்ற பிறகு குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
president murmu speach for republic day