ஒருநாள் ஆசிரியையாக ஜனாதிபதி முர்மு.! - Seithipunal
Seithipunal


ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்திய நாட்டின் குடியரசு தலைவராக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். பெண்களுக்கு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழும் அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி தோட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர்களுடன் ஆசிரியையாக மாறி கலந்துரையாடினார்.

அப்போது ஜனாதிபதி, மாணவர்களின் லட்சியங்கள் மற்றும் அவர்கள் விரும்பும் பாடங்களை பற்றி கேட்டறிந்தார். மாணவர்கள் விஞ்ஞானிகள், மருத்துவர்களாக விரும்புகிறார்கள் என்பதை அறிந்த பின்னர் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும், புவி வெப்பமடைதல் குறித்து மாணவர்களுடன் உரையாடிய ஜனாதிபதி, நீர் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கும் முயற்சியில் அதிக மரங்களை நடுமாறு மாணவர்களை ஊக்குவித்தார்.

தொடர்ந்து நாம் அதிக மரங்களை நட வேண்டும். மழைநீர் சேகரிப்பு மூலம் தண்ணீர் வீணாவதை குறைக்கவும் அதை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காற்று மாசுபாடு குறித்தும், அதை குறைப்பதற்கான வழிகள் குறித்தும் அவர் உரையாடினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

president murmu take teacher role at one day in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->