இந்திய போர் விமானம் 'சுகோய்'வில் பறந்த குடியரசு தலைவர் திரெளபதி முர்மு!
President Murmu takes sortie in Sukhoi Fighter Aircraft
மூன்று நாள் அரசு முறை பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ள குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, இந்திய இராணுவத்தின் சுகோய் 30 எம்கேஐ போர் விமானத்தில் பறந்தார்.
இந்த விமான பயணத்தால் "போர் விமானத்தில் பயணம் செய்த இரண்டாவது பெண் குடியரசு தலைவர் என்ற கௌரவத்தை திரெளபதி முர்மு பெற்றுள்ளார் .
தேஜ்பூர் இந்திய விமானப் படை தளத்திற்கு வருகை தந்த குடியரசு தலைவரை, ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, முதல்வர் ஹிமாண்டா பிஸ்வா சர்மா, மற்றும் விமானப்படை அதிகாரிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து விமானப் படை வீரர்களுக்கான பிரத்யேக உடையை அணிந்த திரெளபதி முர்மு, போர் விமானம் சுகோ எம்கேஐ ஏறி பயணம் செய்தார்.
இரண்டு இருக்கைகளைக் கொண்ட இந்த போர் விமானத்தை ரஷ்யாவை சேர்ந்த நிறுவனம் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டு குடியரசு தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் இதே போர் விமானத்தில் பயணம் செய்தார்.
இதன் மூலம் இந்தியாவில் போர் விமானத்தில் பயணம் செய்த முதல் பெண் குடியரசு தலைவர் என்ற பெருமை பிரதீபா பாட்டீல்-க்கு உண்டு.
மேலும், இதே போர் விமானத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் ராம்நாத் கோவிந்த் ஆகிய இருவரும் பயணம் செய்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
President Murmu takes sortie in Sukhoi Fighter Aircraft