கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட குடியரசுத்தலைவர் முர்மு.! - Seithipunal
Seithipunal


இன்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று ராஷ்டிரபதி பவன் தெரிவித்துள்ளது. 

திரவுபதி முர்மு கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி இந்தியாவின் பதினைந்தாவது குடியரசுத் தலைவராக பதவியேற்றார். அதன் பின்னர், அவர் கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி ராணுவ மருத்துவமனையில் இடது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். 

இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, "இந்திய குடியரசுத் தலைவர், திரவுபதி முர்மு இன்று காலை புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Murmu underwent cataract surgery in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->