பிரதமர் பதவி ஏற்பு விழா : காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் அழைப்பு வரவில்லை என குற்றச்சாட்டு!! - Seithipunal
Seithipunal


நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி நாளை பதவி ஏற்க உள்ள நிலையில், பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தங்களுக்கு இன்னும் அழைக்கவில்லை என எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றச்சாட்டி உள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற கடந்த ஜூன் ஒன்றாம் தேதி நிறைவடைந்தது. 18-வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் நான்காம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களையும்  காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களையும் கைப்பற்றியது.

மக்களவை தேர்தலில் 400 வருடங்களுக்கு மேல் பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று பாஜக கூறி வந்த நிலையில், பாஜகவுக்கு வெறும் 240 தொகுதிகள் மட்டுமே கிடைத்ததால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இருக்கிறார் அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்புகள் விற்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் என்ற கொள்கை படி மாலதிவு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், பதவியேற்பு விழாவிற்கு சர்வதேச தலைவர்கள் மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எங்கள் இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு இன்னும் அழைப்பு விடுக்கவில்லை. இந்தியா கூட்டணி தலைவர்கள் அழைப்பதை பெறும் போது நாங்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து ஆலோசீட்டு முடிவு எடுப்போம் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister acceptance ceremony Allegation that the Congress party has not yet received an invitation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->