இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவை.. இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் முதல் முறையாக வாட்டர் மெட்ரோ சேவையை கொச்சியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கயுள்ளார். இதுவரை தரைவழியில் மட்டுமே இருந்த மெட்ரோ திட்டம் தற்போது கடல் வழியாகவும் தொடங்கப்படவுள்ளது. கொச்சி துறைமுகம் மற்றும் அதை சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும் இந்த திட்டத்தில் 78 மின்சார படகுகள் மற்றும் 38 முனையங்கள் அமைந்துள்ளன.

இதைத்தொடர்ந்து உலகத் தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த கொச்சி மெட்ரோ திட்டத்திற்கு ஜெர்மனி நாட்டின் முதலீட்டு நிறுவனமான கே.எப்.டபள்யூ மற்றும் கேரளா அரசு இணைந்து சுமார் 1136.83 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இந்நிலையில் வாட்டர் மெட்ரோவின் முதல் பயணமாக கொச்சி படகு குழாமிலிருந்து வைபின், காக்கநாடு, துறைமுகம், வெலிங்டன் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படவுள்ளது.

இந்தப் படகில் 100 பேர்வரை பயணிக்கலாம் என்றும், கட்டணம் ரூ 20 முதல் ரூ 40 வரை வசூலிக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கொச்சி வாட்டர் மெட்ரோ நீர்வழிப் போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், கேரளாவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Modi will inaugurate India first water metro service today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->