குஜராத்தில் பால விபத்து பகுதியை நேரில் பார்வையிடும் பிரதமர் மோடி.!
prime minister vist in gujarat bridge accident
குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொங்குபாலம் ஒன்று அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த பாலத்தில் புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் நடைப்பெற்று முடிந்தன.
இதன்பின்னர், சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பாலம் திறக்கப்பட்டு பொது பயன்பாட்டுக்கு வந்தது. குஜராத்தி மக்களுக்கான புது வருட தொடக்கத்துடன் அதாவது சத் பூஜையுடன் இணைந்து பாலம் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த பாலம் அதிக எடை காரணமாக, திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 170 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைப்பெற்று வருகின்றது.
இந்நிலையில், இந்த நிகழ்விடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் பார்வையிட உள்ளார். இந்த தகவலை குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
English Summary
prime minister vist in gujarat bridge accident