தெற்கு ரயில்வே உத்தரவிற்கு எதிர்ப்பு! இளநீருக்கு தடையா?!
Protest against Southern Railway order Train engine drivers should not drink coconut water
திருவனந்தபுரம் ரயில் என்ஜின் டிரைவர்கள்( லோகோ பைலட்) பணியின் போது இளநீர் உள்ளிட்ட பொருட்களை சாப்பிடக்கூடாது என்று தெற்கு ரயில்வே உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. திருவனந்தபுரம் மண்டல சீனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணிக்கு வரும்போதும் பணி முடிந்து போகும் போதும் என்ஜின் டிரைவர்கள் இளநீர், குறிப்பிட்ட பழ வகைகள், குளிர்பானங்கள், வாய்ப்புத்துணர்ச்சியூட்டும் பொருட்கள் மற்றும் இருமல் மருந்துகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.

ரயில்வே நிர்வாகம் உத்தரவு:
அதற்கான காரணத்தையும் தெற்கு ரயில்வே மண்டலம் தெளிவாக எடுத்துரைக்கிறது.இதில் ரயில் என்ஜின் டிரைவர்களிடம், ஆல்கஹால் பரிசோதனை செய்யும் கருவியின் மூலம் சோதனை செய்யும் போது அவர்களின் உடலில் ஆல்கஹாலின் அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது. ஆனால், ரத்த பரிசோதனையில் அதுபோல எதுவும் தென்படவில்லை. இது குறித்து கேட்கையில் ரயில் இன்ஜின் டிரைவர்கள் தாங்கள் இருமல் மருந்து, குளிர்பானங்கள், இளநீர் சாப்பிட்டதாக வெவ்வேறு காரணங்களை தெரிவித்துள்ளனர்.தூக்கமின்மையை போக்க வாய்ப் புத்துணற்சியூட்டியைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளன. இதற்கு தீர்வுகாண முடியாத நிலையில், இதுபோன்ற உத்தரவினை ரயில்வே நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
ரயில் என்ஜின் டிரைவர்கள் எதிர்ப்பு:
இந்த உத்தரவிற்கு ரயில் என்ஜின் டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஆல்கஹால் பரிசோதனை கருவிகளில் கோளாறு நிலவும் நிலையை, அதற்கு தீர்வு காணாமல் ரயில் என்ஜின் டிரைவர்கள் சாப்பிடுவதில் கட்டுப்பாடு விதிக்கலாமா? என்ற கேள்வியும் எழுப்புகின்றன. மேலும் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று ரயில் என்ஜின் டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த உத்தரவை கேட்ட மக்களும் ரயில் இன்ஜின் டிரைவர்களுக்கு சாதகமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
English Summary
Protest against Southern Railway order Train engine drivers should not drink coconut water