ராணுவ முகாம் அருகே 2 பேர் சுட்டுக்கொலை.! போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் அருகே பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு தெற்கே 150 கிமீ (95 மைல்) தொலைவில் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவம் முகாம் அருகே நேற்று காலை உள்ளூர்வாசிகள் சிலர் வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் மீது திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலியானவர்கள் ஷாலிந்தர் குமார் மற்றும் கமல் கிஷோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், ராணுவ முகாமின் காவலாளி அடையாளம் தெரியாமல் தவறுதலாக சுட்டதில் அவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் இதனை மறுத்த ராணுவம், அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவரும் கொல்லப்பட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இராணுவ முகாமில் கடந்த 15 வருடங்களாக பணியாற்றிய பொதுமக்கள் இருவரும் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டி முகாம் மீது கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தவேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Protests After shot 2 Civilians Killed Near Army Camp In Jammu And Kashmir


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->