ராட்சசன் பட பாணியில் 9 பெண்களை கொலை செய்த சைக்கோ கொலையாளி கைது! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசத்தில்  ஒரே மாதிரியாக 9 பெண்களை கொலை செய்த சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் இதுவரை 9 பெண்கள் ஒரே மாதிரியாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை செய்யப்பட்ட பெண்களின் வயது 40 இல் இருந்து 65 வயது க்கு உட்பட்டவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. கொலையாளி ஒன்பது பெண்களையும் அவர்கள் அணிந்திருந்த சேலையை வைத்து கழுத்தை நெருங்கி கொலை செய்திருப்பது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக சைக்கோ கொலையாளி கடந்த ஜூலை மாதம் அனிதா என்ற பெண்ணை ஒன்பதாவது ஆக கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து கொலையாளியை பிடிப்பதற்காக ஆபரேஷன் தலாஷ் என்ற பெயரில் 300 பேர் அடங்கிய 22 குழுக்களை அமைத்து தேடுதல் வேட்டையில் தீவிரமாக காவல்துறை இறங்கியது.

கொலையாளி அடுத்த கட்ட நகர்வுக்கு நகர முடியாததால் அப்பகுதியில் விவசாயிகளை போலவும் ஊர்காரர்கள் போலவும் மாறுவேடத்தில் சுற்றி திரிந்துள்ளார். இந்த நிலையில் ஊர்க்காரர்கள் சொன்ன தகவலை அடிப்படையாக வைத்து ஓவியம் வரைந்து 22 தனிப்படை குழுகளுக்கும் அனுப்பப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். பல்வேறு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிரமாக கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கொலையாளி  குல்தீப் கைது செய்யப்பட்ட நிலையில் முதற்கட்ட விசாரணையில் ஆறு பெண்களை கொலை செய்ததாக ஒத்துக் கொண்டுள்ளதாக தகவல் வழியாக உள்ளது.

திருமணம் ஆன குறுகிய காலத்திலேயே குல்தீப்பின்  மனைவி அவனை விட்டுவிட்டு சென்றதாக தெரிகிறது.இதனால் பெண்கள் மீது ஆத்திரமடைந்த  குலதீப் தனியாக வரும் பெண்களை உடலுறவு அழைத்து மறுக்கவே அவர்களை கொலை செய்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Psycho killer arrested for murdering 9 women in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->