தனக்குத்தானே விஷ உசி செலுத்தி மருத்துவர் தற்கொலை.! இதுதான் காரணமா.?!  - Seithipunal
Seithipunal


மருத்துவர் விஜய் ஆனந்த் என்பவர் புதுச்சேரி மூலக்குளம் தந்தை பெரியார் நகர், மூன்றாவது தெருவில் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் ரேவதி. இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார், இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் சவுதி அரேபியாவில் 2016 ஆம் ஆண்டு முதல் வசித்து வந்துள்ளனர்.

விஜய் ஆனந்த் மருத்துவராக சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ்  காரணமாக அவரது மனைவி ரேவதி மற்றும் மகன் புதுச்சேரி வந்துள்ளனர். அதன் பின்னர் விஜய் ஆனந்த் 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் புதுச்சேரி வந்துள்ளார். 

விஜய் ஆனந்த் புதுச்சேரி வரும்போது வேலை பலு காரணமாக மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதனால், அவர் மனநல மருத்துவரிடம் சென்று  எடுத்துக்கொண்டு மகன், மனைவியுடன் சவுதி அரேபியா சென்றுள்ளார்.

ஆனால், அங்கு சென்ற அவர் சரிவர மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, தம் மனைவி மகனுடன் கடந்த வருடம் டிசம்பர் மாதம் புதுச்சேரி வந்துள்ளார்.

அதன் பிறகு, புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.  மருத்துவர் விஜய் ஆனந்த்திற்கு மன உளைச்சல் அதிகமான நிலையில் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

விஜய் ஆனந்த் மனைவி மட்டும் வேலைக்கு சென்று வந்துள்ளார், இந்த நிலையில் விஜய் ஆனந்த் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த அவரது மனைவி ரேவதி அருகில் இருந்தவர்களின் உதவியுடன்  தமது கணவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றுள்ளார். 

அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார், அவருக்கு அங்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விஜய் ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ரெட்டியார் பாளையம் காவல்துறைக்கு ரேவதி புகார் தெரிவித்துள்ளார்.

 தனது கணவர் வேலை சுமையின் காரணமாக மிகுந்த மனவேதனைக்கு ஆளானதாகவும் அதனால் தமக்கு தாமே விஷ ஊசி போட்டுக் கொண்டு இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudhucherry Doctor suicide for Mind pressure


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->